தமிழ் டிப்ஸ்

  • [ October 20, 2023 ] தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் Health
  • [ October 20, 2023 ] விந்தணு குறைபாடு அறிகுறிகள் Health
  • [ October 20, 2023 ] சமத்துவமே மகத்துவம் கட்டுரை கட்டுரைகள்
  • [ October 20, 2023 ] பூமி நமக்கு சொந்தமானது அல்ல நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் கட்டுரை கட்டுரைகள்
  • [ October 20, 2023 ] மண் வளம் காப்போம் கட்டுரை கட்டுரைகள்

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்

  • Iyarkai Kappom Katturai In Tamil

இந்த பதிவில் “ இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ் ” பதிவை காணலாம்.

நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிணைத்து வாழ்ந்தார்கள் ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னி பிணைந்து வாழ்கின்றோம்.

இயற்கையை பாதுகாத்து அதை நம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொரு உயிர்களிதும் தலையாய கடமையாகும்.

  • இயற்கையை காப்போம் கட்டுரை

Table of Contents

  • இயற்கையை காப்போம்

இயற்கையின் சிறப்பு

இயற்கை மாசடைதல், இயற்கை அனர்த்தங்கள், இயற்கையை பாதுகாத்தல்.

இந்த உலகமானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. இவ்வியற்கையின் கொடைகளுடன் இணைந்து வாழும் படியாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

மனிதன் இப்பூமியில் நீடித்து வாழும் பொருட்டு இயற்கை அதன் கொடைகளை இவ்வுலகிற்கு வாரிவழங்கியுள்ளது. உண்கின்ற உணவில் இருந்து அருந்துகின்ற குடிநீர் வரை இயற்கை மனிதவாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

ஆனால் அண்மைக்காலமாக இயற்கையானது அளவிடமுடியா பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. அவற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டுமாயின் இயற்கையை பற்றி முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

இந்த பூகோளமானது பரந்து விரிந்த நிலப்பரப்புக்களையும், அதன் நாற்புறமும் சூழப்பட்ட சமுத்திரங்களையும், பச்சைப்பசேலென்ற காடுகளையும், எழில்கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளையும், சலசலத்து ஓடுகின்ற ஆறுகளையும் வளங்களாக கொண்டமைந்துள்ளது.

அந்த வளங்களை அனுபவித்திட மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரினங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ளது.

பூமியில் இவ்வுயிரினங்கள் நிலைபெற்று வாழ மழை, காற்று, தீ, நிலம், நீர் போன்ற பஞ்சபூதங்களையும் கொண்டமைந்துள்ளது.

இந்த இயற்கையானது செழித்து விளங்காவிட்டால் மனித இனமானது அழிவுற்றுவிடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இயற்கையில் உள்ள விலைமதிக்க முடியாத வளங்களான நிலம், நீர், காற்று போன்றன பல்வேறுபட்ட காரணங்களால் மாசடைதலே இயற்கை மாசடைதலாக கருதப்படுகின்றது.

இந்த மாசடைதலிற்கு அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் கைத்தொழில் மயமாக்கலோடு மனிதர்களது விரும்பத்தகா நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன.

உலகத்தின் அழகிய பரந்த நிலப்பரப்பானது பல்வேறுபட்ட காரணங்களால் அதன் இயல்புத் தன்மையை இழந்து வருகின்றது.

இறப்பர், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிலத்தினுள் எரிக்கும் போதோ அல்லது புதைக்கும் போது மண்வளம் அற்றுப்போகின்றது. மேலும் இரசாயன கிருமி நாசனிகளை பயிர்களிற்கு தெளிக்கும் போது மண் மாசடைகின்றது.

அண்மைக்காலங்களில் சூழலை அச்சுறுத்திவரும் ஒரு செயற்பாடாக மண் அகழ்தல் இடம்பெற்று வருகின்றது. கடற்கரை மற்றும் ஆற்றுப்படுக்கையில் உள்ள மண் அகழ்வுக்கு உட்படும் போது நீரானது ஊர்மனைகளிற்குள் புகும் அபாயம் எழுந்துள்ளது.

நீரின் பயனை வள்ளுவர் “புறத்தூய்மை நீரான் அமையும்” என்று குறிப்பிடுகின்றார். மனித வாழ்க்கையில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கும் நீரானது குப்பை கூழங்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்ர்நிலைகள் மீது கொட்டுவதாலும், நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததாலும் மாசடைகின்றது.

மேலும் ஆழ்துளைகிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதனால் நிலத்தடி நீரானது அற்றுப்போகின்றது.

இந்த உலகத்தில் மனிதவாழ்க்கைக்கு அவசியமாய் விளங்கும் மற்றொரு காரணி வளி. ஏனெனில் எந்தவொரு மனிதனாலும் சுவாசிக்காமல் இருக்கமுடியாது.

இந்த வளியானது புகைபோக்கிகளில் இருந்து வெளியேறும் அதிகபுகை மற்றும் நச்சுவாயுக்கள் கலக்கும் போது அசுத்தமடைகின்றது.

காடுகளை அழிப்பதனாலும் கனியவளங்களை அகழ்வதனாலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இவ்வாறு இயற்கையின் கிடைத்தற்கரிய கொடைகள் மனிதசெயற்பாடுகளால் அழிவிற்குட்பட்டு வருகின்றன.

இயற்கையானது மனித செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, இயற்கையாகவே நிகழும் சில நிகழ்வுகளாலும் அழிவுக்குள்ளாகின்றது.

உதாரணங்களாக சுனாமி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பனிப்பொழிவு மற்றும் காட்டுத்தீ போன்றவற்றை குறிப்பிடலாம்.

மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இவ்வனர்த்தங்களால் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களும் அழிவடைகின்றன.

பல உயிர்களை காவுகொண்ட இயற்கை பேரழிவிற்கு உதாரணமாக 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்ப்பட்ட சுனாமியை குறிப்பிடலாம்.

இயற்கை அனர்த்தங்களாலும் விலை மதிக்க முடியாத இயற்கையானது அழிவிற்கு உள்ளாகின்றது.

இயற்கையை பாதுகாப்பது தனிமனிதர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

இயற்கை வளங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் 1980 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு உலகபாதுகாப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் 28ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனிதர்கள் அனைவருமே இயற்கையை தேவைக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.

நீரை வீண்விரயம் செய்யாது பயன்படுத்துவதோடு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டும்.

மரங்களை வெட்டுதலை தடுத்து நிறுத்துவதோடு எங்களால் இயன்றளவு மரங்களை வளர்த்து இப்பூமியை பசுமையானதாக மாற்றவேண்டும்.

செயற்கை அதிகம் மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மனநிம்மதியை திரும்பபெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான்.

இயற்கை சூழலில் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கையை காண சுற்றுலா செல்லும் நிலைமையை மனிதன் எதிர்நோக்கியுள்ளான்.

இன்னும் சிலகாலம் இந்நிலைமை தொடருமாயின் இயற்கையோடு சேர்ந்து மனித இனமும் அழிந்து விடக்கூடிய அபாயம் உள்ளது.

இதற்கான உடனடியான தீர்வு இயற்கையை தேவைக்கேற்ப பயன்படுத்தி அதனைப் பாதுகாத்தலாகும்.

எனவே இயற்கைவளங்களை எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்போடு வைத்திருந்து நாமும் நலம் பெற்று வாழ்வோமாக.

ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

  • Iyarkai Kappom
  • Iyarkai Kappom Katturai
  • இயற்கையை காப்போம் கட்டுரை தமிழ்
  • இயற்கையை பாதுகாப்போம்
  • இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

Copyright © Reserved By All Tamil Tips 2023

TamilGuru

Press ESC to close

iyarkai katturai

இயற்கை கட்டுரை | Iyarkai katturai in Tamil

sowmiya p

இயற்கை (Iyarkai) என்பது நமது வாழ்வின் அடிப்படை மற்றும் அற்புதமான பகுதி ஆகும். இயற்கை தாயின் அருளால் நாம் சுவாசிக்கிறோம், வளமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கிறோம். இயற்கையின் அனைத்துப் பகுதிகளும் – மழை, நிலம், மரங்கள், ஆறுகள், விலங்குகள் ஆகியவை மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனிதன் இயற்கையின் கொடைகளால் மட்டுமே தனது வாழ்வை நடத்த முடியும்.

இயற்கையை நாம் பராமரிக்காமல் விட்டால், அதை பயன்படுத்தும் நமக்கு மிகவும் தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகவே இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. அதனால் தான், இயற்கை நம்மை எப்படி காத்துக் கொள்கிறது என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள் மற்றும் பேச்சுகள் மிக முக்கியமாக அமைகின்றன.

இயற்கையை பாதுகாப்பது, அழகையும் ஆரோக்கியத்தையும் தரும்.

  • இயற்கை என்பது இயல்பாகவே உருவானவை. இயற்கை வளங்களைப் பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகின்றது. இயற்கையின் கொடையான இயற்கை வளங்களைக் காப்பது ஒவ்வொரு தனிமனிதனதும் சமூகத்தினதும் தலையாய கடமையாகும்.
  • உலகமானது இயற்கையான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களாலானது. இத்தகைய இயற்கையானது அளிக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதவை ஆகும். இயற்கையின் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இயற்கைச் சூழல்

  • இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே இயற்கையை சார்ந்தே வாழ்கின்றன. எனவே இயற்கைச் சூழலைக் காப்பது மிக அவசியமாகும்.
  • வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும்.

இயற்கை வளங்களின் பயன்கள்

  • இயற்கையில் கிடைக்கும் இயற்கை வளங்கள் மட்டுமன்றி பூமியைக் குடைந்து பெறும் வளங்களும் மிக முக்கியமானவையாகும்.
  • வன வளங்கள் மனித வாழ்க்கையின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு அதாவது உணவு மற்றும் உறைவிடம் போன்றவற்றிற்கு வழி வகை செய்வது மட்டுமல்லாமல், பூமியின் தட்பவெப்ப நிலை மற்றும் பருவ மழை ஆகியவற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றது.
  • காடுகள் மழையை தருவதுடன் மண் அரிப்பினைத் தடுக்கிறது. பூமியின் தட்ப வெப்பநிலையையும் பாதுகாத்து மழை தரும் கடவுளாக உள்ளது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரமே அதன் நீர்வளத்தை சார்ந்துள்ளது. உலக உயிரினங்கள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியமானதாகும். இவ்வாறு ஒவ்வொரு இயற்கை வளங்களும் பல பயன்களை தருகின்றன.

இயற்கையைப் பாதுகாப்போம்

  • இயற்கையைப் பாதுகாப்பதற்கு மாசுபடுத்தாத வழிகளை பயன்படுத்த வேண்டும், இதனால் இயற்கை பாதுகாப்புடன் மனித தேவையும் பூர்த்தியாகும். ஒரு தனி நபரின் பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கையை சிதைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.

இயற்கை மாசுபாடு

  • இன்று மனித குலம் எதிர்நோக்கி வரும் பாரிய பிரச்சனைகளில் இயற்கை மாசுபாடு முதன்மை வகிக்கின்றது. தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு விஷத்தன்மை மண்ணையும், நீரையும் ஒரு சேர நாசமாக்குகிறது.
  • தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது.
  • நெகிழி பாவனைகளின் அதிகரிப்பினால் மண்வளம் மாசடைகின்றது. இதனால் விவசாய நிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க செடி, கொடிகள் வளர்ச்சி தன்மையை இழந்து விடுகின்றன.
  • ஆதிகாலம் முதலே மனிதனின் வாழ்க்கையானது இயற்கையைச் சார்ந்தே உள்ளது. இயற்கையான சூழலில் மனிதர்கள் வாழ்ந்த நிலை மாறி தற்போது இயற்கையை விட்டு வெகு தூரம் விலகி நகரங்களில் பல்வேறு மாசுகளுக்கு இடையே மனிதர்கள் வாழும் நிலை உருவாகி உள்ளது.

Categorized in:

Last Update: October 16, 2024

Related Articles

காமராஜர் கட்டுரை | Kamarajar Katturai in Tamil

காமராஜர் கட்டுரை | Kamarajar Katturai in Tamil

தமிழ் மொழியின் சிறப்புகள்-Tamil Moliyin Sirappugal

தமிழ் மொழியின் சிறப்புகள்-Tamil Moliyin Sirappugal

சுற்றுசூழல் பாதுகாப்பு கட்டுரை-Sutru Sulal Pathukappu Katturai In Tamil

சுற்றுசூழல் பாதுகாப்பு கட்டுரை-Sutru Sulal Pathukappu Katturai In Tamil

தமிழ் சுடர்

Thamizh sudar, இயற்கை வளங்கள் கட்டுரை.

  • iyarkai valam katturai in tamil

இயற்கை வளங்கள் கட்டுரை

உயிர்களின் பல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் உலகின் நிலைத்தன்மையை பேணுவதாகவும் இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.

இன்று இயற்கை வளங்கள் அழிந்து வருவதை பார்க்கும் போது பெரும் மனவருத்தத்தை தருகின்றது.

குறிப்பு சட்டகம்

இயற்கை வளங்கள், இயற்கை வளங்களின் முக்கியத்துவம், இயற்கை வளங்களின் அழிவு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு.

இயற்கை எமக்கு அளித்த அரிய கொடை இயற்கை வளங்கள் ஆகும். ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை மனித வாழ்க்கை இயற்கை வளங்களையே சார்ந்துள்ளது. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே நம் முன்னோர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கி வந்தார்கள்.

ஆனால் இன்று அதிகரித்த நகரமயமாதல், தொழில்மயமாதல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இயற்கை வளங்கள் இயற்கை எய்திக்கொண்டிருக்கின்றன. இதனால் மொத்த உயிரினங்களின் வாழ்வியலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இயற்கையில் இருந்து கிடைக்கப் பெறும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். உயிர்கள் படைக்கப்பட்ட போதே அவற்றுக்கு தேவையான இயற்கை வளங்களும் சேர்த்து படைக்கப்பட்டுள்ளன.

இயற்கை வளங்களுக்கு எடுத்துக்காட்டாக காடுகள், நீர், கடல், கனிம வளங்கள், மலைகள், சமவெளிகள், சூரிய ஒளி போன்றவற்றை குறிப்பிட முடியும்.

இவை மனித தலையீடுகளின்றி தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதியில் காணப்படுவனவாகும். இவை மனிதனால் உருவாக்க முடியாத அரிய வளங்கள் ஆகும். இவையின்றி மனிதனால் தனித்து இயங்க முடியாது.

மனித நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் இயற்கை வளங்களின் பங்களிப்பு இருக்கின்றது. இயற்கை மூலதனமாக, உணவுக்காக, தங்குமிடத்திற்காக, மருத்துவத்திற்காக, வேலைவாய்ப்புக்காக, தேசிய வளர்ச்சிக்காக என இயற்கை வளங்கள் மனித வாழ்வியலோடு ஒருமித்துள்ளது.

அவ்வாறே அனைத்து உயிரினங்களினது வாழ்வும் இயற்கையை சார்ந்தே இருக்கிறது. பல நாடுகளில் அங்குள்ள இயற்கை வளங்களைப் பொறுத்தே அந்த நாட்டின் பொருளாதார நிலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆதலால் அவற்றை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.

அறிவியல் வளர்ச்சி காரணமாக இயற்கை வளங்கள் இயற்கை எய்திக்கொண்டிருக்கின்றன. அருமையான இயற்கை வளங்களை அருங்கொடைகளாக எண்ணி பயன்படுத்தாமல் சுயநல நோக்குடன் பயன்படுத்தி அவற்றின் அழிவுக்கு காரணமாக இருக்கிறோம்.

பசுமரக் காடுகளை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து தொழிற்சாலை கழிவுகளால் சூழலை மாசுபடுத்தி இயற்கையின் தட்ப வெப்ப நிலைகளையும் சீர்குலைத்து உயிரினங்கள் வாழ தகுதி இல்லாத சூழலாக இப்புவியை மாற்றியமைத்து எமது மற்றும் எதிர்கால சந்ததியினுடைய வாழ்வை கேள்விக்கு உட்படுத்தியுள்ளோம்.

பூகோளமயமாதலால் புவி வெப்பமடைதல், நீர்நிலைகள் மாசடைதல், பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வியலை சீர்குலைத்தல் என இயற்கையின் வளங்களை சுரண்டி இயற்கையின் சீற்றங்களாலும் அல்லலுறுகிறோம்.

மனிதன் இப்புவியில் உயிர் வாழ மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல அற்புதங்களை நிகழ்த்தித்ததந்த இயற்கையின் கொடைகளை பாதுகாத்து எம் எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

நீர், மின்சாரம், கடதாசிகள், பெற்றோலியம் என்பவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வருங்கால தலைமுறையை கருத்தில்கொண்டு பசுமையான மரஞ்செடிகொடிகள், உயிரினங்கள், நீர்வளம், நிலவளம்,  கனிய வளம் ஆகியவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் கல்லும் மண்ணும் உள்ள பாலைவனம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் திகதி  உலக இயற்கை வள பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

இயற்கை வளங்கள் நமக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்து அல்ல. எம்மை தொடர்ந்து வரும் எதிர்கால சந்ததியும் பயன்படுத்த இடமளிக்கும் வகையில் அவற்றை சிக்கனமாக நுகர வேண்டும்.

அளவுக்கு மீறி நுகர்வது சட்டவிரோத செயல் ஆகும். இவ்வாறாக இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிப்பதன் மூலமாக மட்டுமே இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்.

இயற்கையின்றி மனிதனால் வாழ இயலாது, மனிதகுல வாழ்வே இயற்கையை நம்பித்தான் இருக்கிறது என்ற நிதர்சனத்தை புரிந்து இயற்கை வளங்களை பாதுகாப்பை எம் தலையாய கடமையாக கொண்டு செயற்படுவோமாக.

You May Also Like:

சுத்தம் சுகம் தரும் கட்டுரை

Copyright © 2024 | ThamizhSudar